சேலம்: "வேளாண் துறை அலுவலர்களுக்கு நிகரான சம்பளம் வழங்க வேண்டும்' என்று கோரி, பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சேலம் கோட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநில தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் விஜயன், துணைத்தலைவர் சங்கர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பெரியசாமி பேசியதாவது: இந்தியாவில் வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தவையான திட்ட மேம்பாட்டுப் பணிகளை செய்து கொடுக்க வேண்டும். 50 செண்ட் நிலம் கொண்ட விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்க வேண்டும்.
ஓய்வு பெறும் நிலையில் 25 ஆண்டுக்கும் மேலாக 520 தினக்கூலி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பட்டுக்கூடு உற்பத்தியில் தொழில் நுட்ப பணியாளர்கள் நியமனம் வேண்டும். வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை பணியாளர்களுக்கு இணையான சம்பளத்தை, பட்டு வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக ஒரு நபர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். செயல்முறை பட்டு பராமரிப்பாளர் தகுதியுள்ள தினக்கூலி பணியாளருக்கு இளநிலை ஆய்வாளர் பணி மேம்படுத்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-From Dinamalar
No comments:
Post a Comment