Saturday, October 31, 2009
பல்கலையில் கலை விழா
கோவை: அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் சார்பில், அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் கலைவிழா நடந்தது.விழாவில், மேலாண்மை துறை பேராசிரியர் சாந்தா க்ரூப் வரவேற்றார். பல் கலை வேந்தர் சண்முகானந் தம் குத்துவிளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்தார். விழாவில், கோயம்புத் தூர் நிஸ் வின் பிசினஸ் சோர் சஸ் நிர்வாக இயக்குனர் ராம் குட்டி பேசினார். சென்னை அண்ணா பல் கலை பேராசிரியர் லட்சுமிபிரியா, பொம்மை கொலு கண்காட்சியை துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் பி.எஸ். ஆர்., சன்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணி, ஆடை கண்காட்சியை துவக்கி வைத்தார். தொண் டாமுத்தூர் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் வெண் ணிலா, மலர் அலங்கார அமைப்பை திறந்து வைத்தார். அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை முன்னாள் பல்கலை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment